அர்ஜுன் தார்ப்பாலின் நிறுவனம் கடந்த 36 வருடங்களாக, உலகின் தலைசிறந்த HDPE LAMINATED FABRICS உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மிகவும் நேர்த்தியான பூர்த்தியான HDPE FABRICS இறக்குமதி செய்து வருகிறது. இவை அனைத்தும் கலப்படம் இல்லாத மிகச்சிறந்த மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு சூரிய வெப்பத்தை பல வருடங்கள் தாங்க கூடிய அளவுக்கு UV STABILIZER சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
இதுவரை எங்களது பிளாஸ்டிக் தார்ப்பாலின்கள் இந்தியாவில் 5 லட்சத்திற்கு மேல் சப்ளை செய்யப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் தார்ப்பாலின் ரகங்களில் இது மிகவும் மேம்பட்ட உயர்தரமான தயாரிப்பாகும்.
" விளம்பரம் தேவையில்லை !
விலை குறைக்க தேவையில்லை !
உங்களிடம் தரம் இருந்தால் ! "அர்ஜுன் HDPE தார்ப்பாலின்கள் கோழிப்பண்ணை மற்றும் வீட்டுக் கூரைகளில், கட்டும் பொழுது கீழ் உள்ள கூரை அல்லது இரும்பு, மர சட்டங்கள் போன்றவற்றின் மீது கட்டி உள்ளே காற்று புகாதவாறு நன்றாக இறுக்கி கட்டினால் மட்டுமே இவை நீண்ட நாட்கள் உழைக்கும். இதில் மூங்கில் மற்றும் கூரான குச்சிகள், இரும்பு கம்பிகள் இதைக் குத்தினால் கட்டாயம் தார்ப்பாலின்கள் கிழியும்.
மேலும் வைக்கோல் போர் மீது போடும் பொழுதும் சோளத்தட்டுகளின் கூரான முனைகள், குத்தி தார்ப்பாலின்களை கிழித்து விடுகின்றன.
பண்ணை குட்டைகள் மீது போடும் பொழுதும் ஒரு சிலர் மிக அதிகப்படியான அளவு தார்ப்பாலின் முனைகளை பூமியில் பதித்து அதை டைட்டாக அமைத்து விடுகின்றனர். இதனால் ஒரு பக்கம் மண்ணின் எடையும் மற்றொரு பக்கம் தண்ணீரின் எடையும் தார்ப்பாலினை இரண்டு பக்கமும் இழுக்கின்றன. ஆகவே அதன் மேற்பரப்பு டேமேஜ் ஆக வாய்ப்புகள் அதிகம். பண்ணை குட்டைகளை தண்ணீர் நிரம்பிய பிறகு மட்டுமே நான்கு புறமும் உள்ள முனைகளை அரை அடி குழி பறித்து அதில் காற்றில் பறக்காதவாறு பதித்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் லூஸ் விட்டு பதிக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் எடை இழுத்தால் தார்ப்பாலின் சற்று நீண்டு அதிக வருடங்கள் உழைக்கும்.
பண்ணை குட்டை தார்ப்பாலின்கள் டைட்டாக கட்டுவதாலும் ஆடு, மாடுகள், குதிரைகள் நடப்பதாலும் கீழே கற்கள் நிறைய இருந்து மக்கள் நடமாட்டம் அதிகமா இருந்தாலும் சிறுவர்கள் அதன்மீது நீச்சல் அதிகம் அடிப்பதாலும் கோரைகள் முளைப்பதாலும் டேமேஜ் ஆகின்றன. இவைகளுக்கு நிர்வாகம் எந்தவிதமான உத்தரவாதமும் கொடுப்பதில்லை.
ஒரு சிலர் கீழ் பாகத்தில், சப்போர்ட் இல்லாமலேயே பைப்புகளில் பிளாஸ்டிக் தார்ப்பாலின்களை டென்ட் மாதிரி கட்டும்போது அது காற்றில் வேகமாக படபடவென்று பறந்து பறந்து வளையங்கள் மற்றும் முனைகள் பிரிந்து போய் விடுகின்றன. இது மாதிரி தவறான பயன்பாட்டுகளுக்கும் எங்களது கம்பெனி எந்த விதமான உத்தரவாதமும் தருவதில்லை. கூரை மாதிரி போடும்பொழுது தண்ணீர் இறங்க வாட்டம் வைத்து கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் தேங்கி அதன் எடை தாங்காமல் தார்ப்பாலின் கிழிய வாய்ப்புகள் உண்டு.
கோழி பண்ணைகளில் சரியானபடி நான்கு புறமும் காற்று புகாதபடி கட்டாவிட்டாலும், காற்று உள்ளே புகுந்து அலசி அதன் மூலம் தார்ப்பாலின்கள் கிழிவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கடந்த சில மாதங்களாக தார்பாலின்களை இரண்டு, மூன்று வருடங்கள் உபயோகப்படுத்தி விட்டு அது கிழிந்த பிறகு மக்கள் அதை போட்டோ அனுப்பி இவ்வாறு ஆகிவிடுகின்றன இதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்கள்.
ஒரு பிளாஸ்டிக் தார்ப்பாய் ஆனது சதுர அடி நான்கு முதல் பத்து ரூபாய் அளவில் விற்கப்படுகின்றன. இந்த விலையில் இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி 18% கப்பல் வாடகை, ஃபேக்டரி ஆட்கள் கூலி, அலுவலக ஆட்கள் சம்பளம், ESI, PFI ஃபேக்டரி வாடகை, கரண்ட் பில் அனைத்தும் உள்ளடக்கியது.
நாங்கள் ஐந்து முதல் 8% வரை குறைந்த அளவில் லாபம் வைத்து Wholesale விலையில் தார்ப்பாலின்களை உற்பத்தி செய்து டீலர் விலையில் வாடிக்கையாளர்களுக்கே நேரடியாக சப்ளை செய்து வருகிறோம். இந்த குறைந்த லாபத்திற்கு இரண்டு மூன்று வருடங்கள் உபயோகப்படுத்திய பின் புதிய தார்ப்பாலின் கேட்டால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள தக்க செயல்பாடு கிடையாது.
இந்த நிலையில் ஒரு சில வாடிக்கையாளர்கள் இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் கழித்து தார்ப்பாலினை புதிதாக மாற்றி தரும்படி கேட்கிறார்கள்.
ஆகவே ஒரு தார்ப்பாலினை முறையாக பயன்படுத்தினால் அவை நீண்ட காலங்கள் உழைக்கும். ஒரே வகையான தார்ப்பாலின்களை ஒரு வருடங்களுக்குள் மிகவும் கவனக்குறைவாக உபயோகப்படுத்தி கிழித்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் 10 வருடங்களுக்கு மேல் எங்களது தார்ப்பாலின்களை உபயோகப்படுத்திய வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.
எனவே தார்பாலின்கள் மிகச் சரியான மூலப்பொருள்கள் கொண்டு தயாரிப்பதாலும் அதிக அளவில் UV Stabilizer சேர்க்கப்பட்டு தயாரிப்பதாலும் மிக நேர்த்தியாக இறக்குமதி செய்யப்பட்ட மெஷின்களை கொண்டு சீலிங் செய்வதாலும் ஒரு தரமான பிளாஸ்டிக் தார்பாய்களை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குகிறோம். இதற்கு நாங்கள் எந்தவிதமான உத்தரவாதமும் தருவது கிடையாது.
உபயோகப்படுத்திய பின் கிழித்து விட்டு இது உற்பத்தி குறைபாடு என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே எங்களிடம் வாங்கும் பொருட்களை முறையாக பாதுகாப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களின் பொறுப்பாகும்.
அதே சமயத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்களை எங்கள் அலுவலகத்தில் வந்து வாங்கி செல்கிறார்கள். நான் வெளியூரில் இருப்பதால் வர இயலாத காரணத்தினால் லாரியில் தார்பாலின்களை புக்கிங் செய்ய சொல்கின்றனர். அவ்வாறு லாரியில் தார்பாலின்கள் அனுப்பும் பொழுது லாரிக்காரர்கள் கொக்கி போட்டு அதன் மூலம் ஏதாவது ஒரு சிறிய டேமேஜ் ஏற்பட்டால் எங்களிடம் பேஸ்ட் வாங்கிக்கொண்டு அதை அந்த பகுதியில் வைத்து எக்ஸ்ட்ரா பீஸ் வைத்து ஒட்டிக் கொள்ளலாம் நன்றாகவே இருக்கும். இதனால் தரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. லாரி மூலம் வரும் சரக்குகளுக்கு லாரி சர்வீஸ் நடத்தும் கம்பெனிகளுக்கு இது போன்று ஏற்படும் இழப்புகளுக்கு முறையீடு செய்யலாம். இதற்கு எங்களது நிர்வாகம் பொறுப்பேற்காது. அவ்வாறு நடக்கக்கூடாது என்றால், நீங்கள் எங்களது நிறுவனத்திற்கு நேரில் வந்து தங்கள் பொருட்களை செக்கிங் செய்து நேரடியாக தங்கள் ஊருக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லலாம்.
இந்த குறிப்பு கையேடுகளின் சாராம்சத்தை புரிந்து கொண்டு இதற்கு சம்மதம் என்றால் மட்டுமே, எங்களிடம் நீங்கள் பொருட்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
அர்ஜுன் shield நைலான் தார்ப்பாய்கள் உலகத்தரத்தோடு தயாரிக்கப்பட்டு பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாளடைவில் லாரிகளில் கயறு கட்டும்போது கயற்றை இறுக்குவதற்கு அதைப்பிடித்து தொங்குகின்றனர், மற்றும் அவ்வாறு தொங்கும்போது, மிகவும் Tight ஆக கட்டிஇருக்கும்போது, speed breaker களிலும், ரோடு ஓரங்களில் உள்ள பள்ளங்களிலும் வண்டி ஏறி இறங்கும்போது, கயிறுக்கும் தார்ப்பாயுக்கும் ஏற்படும் உராய்வில், அவை காயப்பட வாய்ப்புகள் அதிகம் எனவே கயிறு கட்டும்போது ஏற்ப்படும் காயங்களின் காரணமாகவோ அல்லது Manmade Damages காகவோ, எக்காரனத்தைக் கொண்டும் Tarpaulin Replacement கிடையாது. அவைகளை Heatsealing முலம் Extra Patches போட்டு ஒட்டி மீண்டும் உபயோகப்படுத்தலாம். Nylon Tarpaulin களுக்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது.