இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட விலைகள் இறுதியானவை. நாங்கள் டீலர்களுக்கு கொடுக்கும் wholesale விலையையே வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருவதால், இதற்கு மேல் தள்ளுபடி / Discount கிடையாது.
உங்களுக்கு சாம்பிள்ஸ் / Samples தேவைப்பட்டால் எங்களுக்கு whatsapp மூலம், உங்களது விலாசம் கொடுத்தால், உங்கள் முகவரிக்கு இலவசமாக எங்களது சாம்பிள்ஸ் அனுப்பி வைக்கப்படும். பொருட்களை தொட்டு பார்த்து தரம் பார்த்து, பிறகு நீங்கள் ஆர்டர் செய்யலாம்.
நீங்கள், தேர்ந்தெடுத்த தார்பாலின் (GSM)ஜிஎஸ்எம், கலர், மற்றும் அளவுகள் எங்களுக்கு தெரியப்படுத்தினால் நாங்கள் அதற்கேற்றவாறு உங்களுக்கு (Quotation)கொட்டேஷன், மற்றும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் / GPay / PhonePay Number அனுப்பி வைப்போம். பிறகு நீங்கள் அந்த அக்கவுண்டில் பணம் செலுத்தி விட்டு எங்களுக்கு (Screen Shot), பணம் செலுத்திய ஆதாரத்தை அனுப்பி வைத்தால் உங்களது ஆர்டர் உற்பத்திக்கு எடுத்துக் கொள்ளப்படும். அவை ஓரிரு நாட்களில் உங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படும். லாரி வாடகை கொடுத்து நீங்கள் சரக்குகளை பெற்றுக் கொள்ளலாம். லாரிகளில் சரக்கு உங்கள் ஊருக்கு வந்து சேர ஒன்று முதல் 4 நாட்கள் வரை ஆகலாம். ஆகவே லாரிகளில் ஏற்படும் டெலிவரி தாமதங்களுக்கு எங்களது நிர்வாகம் பொறுப்பல்ல. உங்களுக்கு மிகவும் அவசரமாக சரக்கு தேவைப்பட்டால் நீங்கள் எங்களது சேலம் அலுவலகத்திற்கு வந்து உடனடியாக கையோடு சரக்கை பெற்று செல்லலாம்.
எப்பொழுதுமே தார்பாய்கள் ஆர்டர் செய்யும் அளவைவிட நீளத்தில் ஒரு அடியும் அகலத்தில் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை குறைவாக இருக்கும். ஆகவே உங்களுக்கு இறுதியாக தேவைப்படும் அளவை உறுதியாக எங்களுக்கு தெரிவித்தால், அதற்கு ஏற்றவாறு நாங்கள் கொஞ்சம் அதிகம் நீள அகலம் எடுத்து உற்பத்தி செய்து கொடுக்க ஏதுவாக இருக்கும்.
தங்களது ஊருக்கு வரும் லாரி பெயர், மற்றும் டெலிவரி பாய்ண்ட், தாங்கள்தான் கம்பெனிக்கு தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் உங்கள் ஊருக்கு எந்த லாரி வரும் என்று தேடுவதற்கு நேரம் எடுக்கும். ஆகவே ஆர்டர் செய்யும் பொழுது தங்கள் ஊருக்கு வரும் லாரி மற்றும் அதனுடைய போன் நம்பர் எங்களுக்கு தெரிவித்தால் உங்களுக்கு சரக்குகள் சீக்கிரம் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
அதே போல் லாரிகளில் சரக்குகள் அனுப்பப்படும் பொழுது பொருட்களின் மீது ஏதாவது காயம் ஏற்பட்டால் அதை நீங்கள் லாரி அலுவலகத்தில் முறையிட்டு அதற்கான இழப்பை ஈடு செய்து கொள்ளலாம். லாரி பயணத்தில் ஏற்படும் டேமேஜ் களுக்கு எங்களது நிர்வாகம் பொறுப்பேற்காது.
உங்கள் சரக்குகளுக்கான பில் சரக்கோடு லாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். எனவே டெலிவரி எடுக்கும் பொழுது பில் காப்பியை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.
தாங்கள் எப்பொழுதும் எங்கள் அலுவலகத்தை, 9442212345, 9486112345 நம்பரை காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
"எங்களின் தரமான பொருட்களே எங்கள் விளம்பர தூதர் !
எங்கள் பொருட்களே, மேலும் எங்களது பொருட்களை விற்கும் ! "